Tuesday, September 10News That Matters

இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் அதிகரிப்பு

நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றையதினம்(10.10.2023) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (10.10.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 328.74 ரூபாவாகவும், கொள்வனவு விலை 317.91 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 243.58 ரூபாவாகவும், கொள்வனவு விலை 232.65 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 349.33 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 334.49 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 403.93 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 388.30 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. 

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் சுற்றுலா வருமானம் 1.45 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது சென்ற ஆண்டின் (2022) இதே காலகட்டத்தை விட 67% உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், ஒகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய இரண்டு மாதாந்திலும் சுற்றுலாத்துறை ஈட்டிய வருமானம் எதிர்பார்த்த இலக்கை விட குறைவாக பதிவாகியுள்ளது.

அதிகளவு வருமானத்தை ஈட்டிய மாதமாக ஜூலை மாதம் காணப்படுகிறது, 219 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

    • 1.55 மில்லியன் சுற்றுலாப்பயணிகளை வரவழைத்து ஆண்டு இறுதிக்குள் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் வருமானத்தை ஈட்டுவதை இலங்கை சுற்றுலாத்துறை இலக்காகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • 2023 இன் முதல் ஒன்பது மாதங்களில் 1.01 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களின் வருகை பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

    • ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை விமானத் துறைக்கு 22 பில்லியன் ரூபாய் இலாபம் கிடைத்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார்.

    • ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (09.10.2023) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

    • சேவை வழங்கல் ஊடாக எமது நாட்டு விமானத்துறை 2023 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 22 பில்லியன் ரூபா இலாபம் ஈட்டியுள்ளதாகவும் அதில் சுமார் 10 பில்லியன் ரூபா திறைசேரிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

22 பில்லியன் இலாபம் ஈட்டியுள்ள விமானத்துறை!

பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை 200 விமானப் போக்குவரத்து சேவைகளைப் பூர்த்தி செய்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.அத்துடன், ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அந்த திட்டத்தை திறைசேரிக்கு அனுப்பிய பின்னர், உலக வங்கியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதன்படி, ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கான வெளிப்படைத்தன்மையை உருவாக்க சர்வதேச ஆலோசகர் ஒருவரின் உதவியை நாட பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, புதிய ஆலோசகர் நியமிக்கப்பட்டு, ஸ்ரீலங்கன் விமான சேவையை விரைவாக மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திட்டமிட்டபடி பணிகள் நடந்தால், அடுத்த ஆண்டு பெப்ரவரிக்குள் எதிர்பார்க்கும் பலன்களைப் பெறலாம். தற்போது எங்களிடம் எந்த விமானமும் இல்லை. அனைத்து விமானங்களும் குத்தகைக்கு எடுக்கப்பட்டவையாகும். ஏ330 விமானங்கள் இல்லாததால் இங்கிலாந்து, பிரான்ஸ், ஆவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு விமான சேவைகளை நடத்த முடியவில்லை.தற்போது குத்தகைக்கு எடுத்துள்ள அனைத்து விமானங்களும் ஏ320 விமானங்களாகும். அந்த விமானங்களைக் கொண்டு தூர இடங்களுக்கு சேவை மேற்கொள்ள முடியாது. எனவே, விமான நிறுவனத்தை மறுசீரமைப்பதன் மூலம் இதுபோன்ற பல சிக்கல்களைத் தீர்க்க முடியும். அண்மையில் விமானம் தாமதம் காரணமாக ஏற்பட்ட இழப்பு 06 பில்லியன் டொலர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *