2028 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் 2028 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இதுமட்டுமன்றி பேஸ்பால், சாஃப்ட்பால், லாக்ரோஸ், ஸ்குவாஷ் மற்றும் கிரிக்கெட் என ஐந்து விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு இந்த விளையாட்டு பட்டியலை உறுதி செய்துள்ளதாகவும். இது தொடர்பாக ஒலிம்பிக் திட்டக் குழுவுடன் கலந்தாலோசித்த பிறகு, மும்பையில் நடைபெறும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அமர்வுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 1900 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடப்பட்டு உள்ளது. பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடப்படவில்லை. இதனையடுத்து 128 ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த இரண்டு ஆண்டுகளில் புதிய விளையாட்டு மதிப்பீடு சார்ந்த செயல்முறையில் கிரிக்கெட் விளையாட்டுக்கு லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு வழங்கிய ஆதரவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே (Greg Barclay) தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர் ஒருவர் அடித்த அதிவேக சதம் என்ற புதிய சாதனையை குசல் மெண்டிஸ் படைத்துள்ளார். இவர் 65 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கலாக சதத்தை பதிவு செய்துள்ளார். தற்போது துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 38 ஓவர் முடிவில் நான்கு விக்கெட்களை இழந்து 266 ஓட்டங்களை பெற்றுள்ளது. குசால் மெண்டிஸ் 122 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளார்.
- 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது ஆரம்பமாக்கியுள்ளது.
இப்போட்டி ஹைதராபாத் மைதானத்தில் இன்று (0.10.2023) நடைபெற்று வருகின்றது. போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளதுடன் இலங்கை அணித் தலைவர் தசுன் சானக்க முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளார்.
- இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 8.2 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 48 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
- இன்றைய போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியின் சூழல் பந்து வீச்சாளர்களில் ஒருவரான மகீஷ் தீக்ஷன விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இவர் 65 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கலாக சதத்தை பதிவு செய்துள்ளார்.
தேசிய மட்ட உதைபந்தாட்ட போட்டி: தெல்லிப்பழை மஹாஜன பாடசாலை சாதனை
கல்வி அமைச்சினால் நடத்தப்படும் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் 17 வயது பிரிவு அணி முதலிடத்தை பிடித்து சாம்பியன் பதக்கத்தை வென்றுள்ளது. இப்போட்டி இன்று (09.10.2023) காலை 9.30 மணிக்கு யூனியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் குருநாகல் கவுசிகம மத்திய கல்லூரியை எதிர்கொண்ட மகாஜனா 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. மஹாஜன கல்லூரி முதல்பாதி ஆட்டத்தில் 1 கோலையும் இரண்டாவது பாதி ஆட்டத்தில் 2 கோல்களையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை 20 வயது பிரிவு பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் தெல்லிப்பழை மஹாஜன பாடசாலை இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. இறுதிப்போட்டியில் மகாஜனக் கல்லூரியை எதிர்கொண்ட பொலன்றுவை பென்டிவெவா மத்திய கல்லூரி 2:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று முதலாம் இடத்தை பிடித்துள்ளது. முதல் பாதி ஆட்டத்தின்போது இரண்டு அணிகளும் மிகவும் உற்சாகமாக விளையாடிய போதும் கோல்கள் எவற்றையும் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாம் பாதி ஆட்டத்தின்போது பொலன்னறுவை பென்டிவெவா அணியினர் இரண்டு கோல்களை அடித்து வெற்றி வாகை சூடியுள்ளனர்.