Sunday, April 28News That Matters

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய அணி

உலக கோப்பை கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய அணி தனது முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளது.அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று(08.10.2023) இடம்பெற்ற லீக் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.குறித்த போட்டியில் இந்திய அணிக்கு 200 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணித் தலைவர் கம்மின்ஸ் துடுப்பெடுத்தாட்டத்தை தேர்வு செய்திருந்தார்.அதன்படி முதலித் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 199 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இதன்படி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்துள்ளது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ராகுல் 97 ஓட்டங்களையும் (ஆட்டமிழப்பின்றி), விராட் கோலி 85 ஓட்டங்களையும் பெற்றுகொண்டனர். 

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர் ஒருவர் அடித்த அதிவேக சதம் என்ற புதிய சாதனையை குசல் மெண்டிஸ் படைத்துள்ளார். இவர் 65 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கலாக சதத்தை பதிவு செய்துள்ளார். தற்போது துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 38 ஓவர் முடிவில் நான்கு விக்கெட்களை இழந்து 266 ஓட்டங்களை பெற்றுள்ளது. குசால் மெண்டிஸ் 122 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளார்.

  • 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது ஆரம்பமாக்கியுள்ளது.
  • இப்போட்டி ஹைதராபாத் மைதானத்தில் இன்று (0.10.2023) நடைபெற்று வருகின்றது. போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளதுடன் இலங்கை அணித் தலைவர் தசுன் சானக்க முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளார்.

  • இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 8.2 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 48 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
  • இன்றைய போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியின் சூழல் பந்து வீச்சாளர்களில் ஒருவரான மகீஷ் தீக்ஷன விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இவர் 65 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கலாக சதத்தை பதிவு செய்துள்ளார்.

தேசிய மட்ட உதைபந்தாட்ட போட்டி: தெல்லிப்பழை மஹாஜன பாடசாலை சாதனை

கல்வி அமைச்சினால் நடத்தப்படும் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் 17 வயது பிரிவு அணி முதலிடத்தை பிடித்து சாம்பியன் பதக்கத்தை வென்றுள்ளது. இப்போட்டி இன்று (09.10.2023) காலை 9.30 மணிக்கு யூனியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் குருநாகல் கவுசிகம மத்திய கல்லூரியை எதிர்கொண்ட மகாஜனா 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. மஹாஜன கல்லூரி முதல்பாதி ஆட்டத்தில் 1 கோலையும் இரண்டாவது பாதி ஆட்டத்தில் 2 கோல்களையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை 20 வயது பிரிவு பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் தெல்லிப்பழை மஹாஜன பாடசாலை இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. இறுதிப்போட்டியில் மகாஜனக் கல்லூரியை எதிர்கொண்ட பொலன்றுவை பென்டிவெவா மத்திய கல்லூரி 2:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று முதலாம் இடத்தை பிடித்துள்ளது. முதல் பாதி ஆட்டத்தின்போது இரண்டு அணிகளும் மிகவும் உற்சாகமாக விளையாடிய போதும் கோல்கள் எவற்றையும் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாம் பாதி ஆட்டத்தின்போது பொலன்னறுவை பென்டிவெவா அணியினர் இரண்டு கோல்களை அடித்து வெற்றி வாகை சூடியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *